கொள்முதல் கொள்கை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வாங்கப்படும் பொருட்கள் ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வாங்கப்படுகின்றன.

1) திறந்த ஒப்பந்தப்புள்ளி:

ஒப்பந்தப்புள்ளிகள் தின செய்தித்தாள்களின் விளம்பரம் மூலம் மற்றும் த.நா.மி.உ.ம.ப.க, அரசு இணையதளங்கள் மூலம் கோரப்படுகின்றன.

2) வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி:

ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி திறந்தமுறை ஒப்பந்தப்புள்ளி கோருவது சிக்கனமாகவோ, பலனுள்ளதாகவோ இல்லை என்று கருதினால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறை மூலமாக நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோரலாம்.

3) தனி ஒப்பந்தப்புள்ளி:

பொருட்கள் வாங்குவது உடனடி உபயோகத்திற்கு தேவைப்படுவதாலும், வாங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டுமே வாங்கப்படும் பொருள் விற்பனைக்கு இருந்தாலோ தனி ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் பொருட்கள் வாங்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் ஒப்பந்தப்புள்ளி குறிப்பீட்டில் உள்ள விதிமுறைகளின்படி தங்களின் விலையினை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் விலை சமர்ப்பிக்கும் போது குறிப்பீட்டில் உள்ளபடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். அல்லது முன் வைப்பு தொகை செலுத்துவதிலிருந்து விலக்கப்படுவதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பொதுவாகவே முன் வைப்பு தொகையின் அளவு பொருட்களின் மொத்த விலையில் 1% என்ற அளவில் இருக்கும்.

ஒரு பகுதி முறை:

இதில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று ஒப்பந்தப்புள்ளிகாரர்களின் விலையும், மற்ற விவரங்களும் படிக்கப்படும்.

இரு பகுதி முறை:

இதில் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் இரண்டு மூடப்பட்ட உறைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு உறையில் பொருட்கள் விலை குறித்த விபரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும், மற்றோர் உறையில் ஒப்பந்தப்புள்ளி குறித்த இதர விவரங்கள் மற்றும் முன்வைப்பு தொகை இணைக்கப்பட வேண்டும். முன் வைப்பு தொகை தனியாகவும் சமர்ப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று பொருட்களின் விலை நீங்கலாக ஒப்பந்தப்புள்ளி விபரங்கள் மட்டுமே படிக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளிகாரர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் குறிப்பிட்ட பிறிதொரு நாளில் படிக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பில் குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் பெயரும், முன் வைப்பு தொகை விவரம், ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் பொருட்களின் விலை விவரங்கள் ஒரு பகுதி முறையில் அன்றே படிக்கப்படும். பொருட்களின் விலையில் விவரங்கள் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு அதற்கான குழுவினரால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்கப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகாரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.

இருபகுதிமுறை ஒப்பந்தப்புள்ளியில், முன்வைப்பு தொகை ஏற்கப்பட்டால் மட்டும் வணிகம் சார்ந்த விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளில் படிக்கப்படும். பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் குறிப்பிட்ட நாளில் அது திறக்கப்படும் வரையில் தகுதியான அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிக்காரர்களின் வணிக விவரங்களை ஏற்றால் குறிப்பிட்ட நாளில் மற்றும் நேரத்தில் அவர்களின் பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் திறக்கப்படும். பொருட்களின் விலையில் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு தகுதியான குழுவால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்கப்பட்டால்,ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.

Save-energy1 மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும்        Save-energy2 உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும்        Save-energy3 மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம்        Save-energy5 மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்  Save-energy1 மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்  Save-energy1 மாசற்ற சுற்றுச்சூழலுக்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவோம்Save-energy1 நம் தாய் பூமியை காக்க மின் வாகனத்தை ஆதரிப்போம்   Save-energy1 மின்சார வாகனம் இரைச்சலை உண்டாக்குவதில்லை   Save-energy1 பூமியை பசுமையாக்குவோம் மின்வாகனத்தை கொண்டு   Save-energy1 எதிர்காலத்தை வடிவமைப்போம் மின்சார வாகனம் கொண்டுSave-energy1 மின்வாகனம் பயன்படுத்தி எதிர்கால தலைமுறை காப்போம்Save-energy1 எரிபொருளைச் சேமிக்கவும், பணத்தைச் சேமிக்கவும், மின்சார வாகனத்திற்கு மாறவும்Save-energy1 மின் வாகனம் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்Save-energy1 மின்சார வாகனம்: ஒரு பிரகாசமான எதிர்காலம்Save-energy1 மின்சார வாகனம்: புகை, சத்தம் மற்றும் மாசு இல்லை