தமிழ்நாட்டைப் பற்றி

தமிழ்நாடு இந்திய தீபகர்ப்பத்தின் தென் கிழக்கில் அட்சரேகை 85° - 13° 35 ‘ வடக்கிலும், தீர்க்கரேகை 76° 5’ - 80° 20’ கிழக்கிலும் அமைந்துள்ளது. தமிழகம், வடக்கில் ஆந்திர மாநிலத்தையும் கர்நாடக மாநிலத்தையும் மேற்கில் கேரளா மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியில், வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமமாகிறது.              

தமிழகம் ஆண்டுமுழுவதும் சீரான தட்பவெட்பம் கொண்டுள்ளது. சமவெளியில் வெப்பநிலை 38°C - 20°C வரை நிலவுகிறது. தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்றின் மூலம் ஆண்டிற்கு 911.6 மி.மீ. மழை கிடைக்கிறது.தமிழகத்தின் ஆட்சிமொழி தமிழாகும். தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த நூல்களுக்குள் ஒன்றான திருக்குறள் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. தமிழக கலாச்சாரம் பண்டைய மற்றும் புதிய கலாச்சாரத்தின் கலவையாக விளங்குகிறது. இயல், இசை நாடகம் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக திகழ்கிறது. இங்குள்ள இறைத்தலங்களின் கோபுரங்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்குகின்றது.

தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் அழகிய கடற்கரை சுமார் 1000 கி.மீ. நீளத்திற்கு அமைந்துள்ளது. கம்பீரமான மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கோரமண்டலகரைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை.தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் மனித வளமும் மிகுந்து காணப்படுகிறது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள சர்வதேச விமானத்தளம், துறைமுகம், சாலைவழி மற்றும் இரயில்வழி தளங்கள் குறிப்பிடத்தக்கவை. சென்னை தென் இந்தியாவின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் ஆகும். தமிழ்நாடு தரமான கல்வி நிலையங்களுக்கும், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்திற்கும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது.

தமிழக அரசின் வெளிப்படையான அணுகுமுறையால் இங்கு தொழில் முதலீடு அதிகமாக காணப்படுவதால் உற்ப்பத்திதுறையின் முன்னோடியாகவும் தமிழகம் விளங்குகிறது. பொருட்கள் வாகன இயந்திரம் மற்றும் உதிரிபாகங்கள் போன்ற தொழில்கள் லாபகரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஜவுளி தோல் உற்பத்தி தொழில்களும் நிறைந்து காணப்படுகிறது. தமிழகம் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திமையமாக நிறுவுவதே தமிழக அரசின் குறிக்கோள் ஆகும்.

இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திலும் உற்பத்தி துறையிலும் விளங்குகிறது. வன்பொருள்/மென்பொருள் மற்றும் ஆராய்ச்சி துறையில் கூட்டு இணைப்பாக அமைந்துள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடே இதற்கு தகுந்த சான்றாகும்.

Save-energy1 மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும்        Save-energy2 உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும்        Save-energy3 மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம்        Save-energy5 மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்  Save-energy1 மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்  Save-energy1 மாசற்ற சுற்றுச்சூழலுக்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவோம்Save-energy1 நம் தாய் பூமியை காக்க மின் வாகனத்தை ஆதரிப்போம்   Save-energy1 மின்சார வாகனம் இரைச்சலை உண்டாக்குவதில்லை   Save-energy1 பூமியை பசுமையாக்குவோம் மின்வாகனத்தை கொண்டு   Save-energy1 எதிர்காலத்தை வடிவமைப்போம் மின்சார வாகனம் கொண்டுSave-energy1 மின்வாகனம் பயன்படுத்தி எதிர்கால தலைமுறை காப்போம்Save-energy1 எரிபொருளைச் சேமிக்கவும், பணத்தைச் சேமிக்கவும், மின்சார வாகனத்திற்கு மாறவும்Save-energy1 மின் வாகனம் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்Save-energy1 மின்சார வாகனம்: ஒரு பிரகாசமான எதிர்காலம்Save-energy1 மின்சார வாகனம்: புகை, சத்தம் மற்றும் மாசு இல்லை