செய்திக்குறிப்பு

2024

Press Release 2024

Sl.No
Press Release Date
Description
1.07.03.2024

திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டில் 10,158 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வட சென்னை மிக உய்ய அனல் மின் நிலையம் III-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு .க .ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து,மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்..

2.06.03.2024

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள். "நீங்கள்நலமா” திட்டத்தின் கீழ் மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயாளிகளை தொடர்பு கொண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

3.01.03.2024

மாண்புமிகு நிதிமற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில்,எதிர்வரும் கோடை காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

4.27.02.2024

எரிசக்தி சார்பில் ரூ.7514.50 கோடி செலவில் 20 புதிய துணை மின்நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகக்கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து,67 துணை மின்நிலையங்களில் திறன் மேம்படுத்தப்பட்ட 69 துணை மின்மாற்றிகளின் செயல்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

5.08.02.2024

சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம்- புதிய செயற் பொறியாளர் கோட்ட அலுவலகங்கள்– முகவரி தெரிவித்தல்

6.23.01.2024

தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க மின் இணைப்பு உள்ள கட்டிடங்களின் மேற்கூரையில் 3 கிலோவாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

2023

Press Release 2023

Sl.No
Press Release Date
Description
1.30.12.2023

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் 01.02.2024 வரை நீட்டிப்பு -மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

2.27.12.2023

மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.

3.18.12.2023

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு -மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு.

4.18.12.2023

திருநெல்வேலி,தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்க மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 5000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்- மாண்புமிகு நிதிமற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தகவல்.

5.09.12.2023

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் -மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

6.06.12.2023

கன மழையின் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு -மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

7.05.12.2023

துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின்விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது, பொதுமக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின்விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன் - மாண்பு மிகுநிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வேண்டுகோள்

8.04.12.2023

மிக்ஜாம் புயல் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள நுங்கம்பாக்கம், தரமணி ஐஐடி மற்றும் அண்ணாசாலை துணைமின் நிலையங்களில் மாண்பு மிகுநிதி, மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

9.04.12.2023

சென்னை நகர் முழுவதுக்கும் மின்னோட்டம் தரும் 1,794 மின்பாதைகளில் 694 மின்பாதைகளில் மட்டும் மின்சாரம் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்காக போர்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க 5,527 மின்வாரிய களப்பணியாளர்களும் மற்றும் 1,176 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர் -மாண்பு மிகுநிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் -தகவல்

10.02.12.2023

வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்தில், மின்மாற்றி பழுது நீக்கும் பணியினை மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் ஆய்வு செய்தார்

11.30.11.2023

சென்னையில் மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழத்தினால் எடுக்கப்பட்ட மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

12.29.11.2023

இன்று (29.11.2023) காலை சுமார் 7 மணி அளவில்கொரட்டூர் மின் தடை மைய தொலைபேசிக்குஎண்.7, 3வது குறுக்கு தெரு, ஜம்புகேஸ்வரர் நகர், கொரட்டூர், சென்னை ஈஸ்வரன்கோவில் எதிரில் உள்ள ஸ்ரீ துர்கா இண்டஸ்டீரீஸ், அருகில் ஒரு நபர் மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக செய்தி பெறப்பட்டது. அதனை தொடர்ந்து மின் தடை நீக்க பணியாளர்கள் அங்கு விரைந்து,ஸ்ரீ துர்கா இண்டஸ்டீரீஸ் அருகில் உள்ள 500 KVA ஜம்புகேஸ்வரர் நகர் SS I மின்மாற்றியை மின் துண்டிப்பு செய்தனர்.

13.15.11.2023

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்

14.04.11.2023

மாண்பு மிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

15.03.11.2023

கணேஷ்நகர் 230/33 கி.வோ. வளிமக்காப்பு துணை மின்நிலைய கட்டுமானப் பணிகளை மாண்புமிகு மின்துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு அவர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

16.28.08.2023

சென்னையில் 31.08.2023 அன்று காமை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், கிண்டி, அண்ணாநகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

17.28.08.2023

சென்னையில் 30.08.2023 அன்று காமை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அமையாறு, கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநிதயாகம் நிறுத்தப்படும்.

18.28.08.2023

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வீரர்கள் அகில இந்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி .

19.25.08.2023

தமிழ்நாட்டில் நடைப்பெற்று வரும் வீட்டு மின்இணைப்பு மற்றும் பொது மின்இணைப்பு “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மேலும் 25.09.2023 வரை ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு.

20.27.07.2023

வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் – 2023” விழாவில்,வேளாண் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

21.27.07.2023

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வேளாண் சங்கமம்- 2023 விழாவில் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

22.08.07.2023

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் மனுவிற்கான விளக்கம்

23.06.07.2023

மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை – 3 பணிகளை ஆய்வு செய்தார்.

24.26.06.2023

மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மாநில மின்பகிர்ந்தளிப்பு மையத்தை ஆய்வு செய்தார்

25.20.06.2023

சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்டபழுதை, சரிபார்க்கும் பணியை மாண்புமிகுநிதி, மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு அவர்கள் பார்வையிட்டார்.

26.19.06.2023

மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுது.

27.08.06.2023

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்..

28.22.05.2023

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 103 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

29.20.05.2023

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி ஆகியோர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சீரான மின்விநியோகம் வழங்குவது தொடர்பான சிறப்பு ஆய்வுகூட்டம் மேற்கொண்டார்கள்.

30.19.05.2023

எரிசக்தி துறை சார்பில் ரூ.2003 கோடி செலவில் நிறுவபத்துள்ள 16 புதிய துணை மின்நிலையங்களை திறந்து வைத்து ,65 துணை மின் நிலையங்களில் திறன் மேம்படுத்தபட்ட 67 மின் மாற்றிகளின் செயல் பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கினார்

31.17.05.2023

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (17.05.2023) சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

32.10.05.2023

மாண்புமிகு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

33.22.04.2023

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் ஊதிய விகித உயர்வு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைமேற்கொண்டார்.

34.07.03.2023

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

35.15.02.2023

மாண்புமிகு மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி , விசைத்தறி , குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணிவை ஆதாருடன் இணைப்பது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

36.11.01.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50,000 விவசாய பயனாளர்களில் 5 நபர்களுக்கு நேரடியாக மின் இணைப்பு ஆணையினை வழங்கினார்.

37.03.01.2023

தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

2022

Press Release 2022

Sl.No
Press Release Date
Description
1.31.12.2022

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணி வருகிற 31.01.2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் அறிவிப்பு.

2.20.12.2022

50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் .

3.15.12.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள்.

4.15.12.2022

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் – மாண்புமிக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

5.10.12.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் மாநில பகிர்ந்தளிப்பு மையத்தில் ஆய்வு

6.09.12.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் "மாண்டஸ் புயலை" எதிர் கொள்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள்.

7.28.11.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்று வரும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்கள்.

8.26.11.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைப்பது பற்றி வெளியிட்ட செய்தி குறிப்பு.

9.18.11.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

10.12.11.2022

மாநில மின் சுமை கண்காணிப்பு மையத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் .

11.11.11.2022

விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

12.07.11.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு கூடுதலாக 50,000 மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்க விழா தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

13.07.11.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எரிசக்தித் துறை சார்பில் ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து, 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

14.02.11.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

15.01.11.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் இன்று (01.11.2022) மாலை கே.கே.நகர் 110/33/11 கி.வோ. துணைமின் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்

16.15.10.2022

உதயப்பூரில் நடைபெற்ற அனைத்து எரிசக்தித் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.

17.11.10.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

18.28.09.2022

சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டமன்ற தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளை (Ring Main Unit) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

19.17.09.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்திரு. விசெந்தில்பாலாஜிஅவர்கள்வட சென்னை அனல் மின் திட்டம்நிலை – 3 பணிகளை ஆய்வு செய்தார்.

20.14.09.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாதவரத்தில் சென்னை வடக்கு மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

21.02.09.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் சட்டமன்ற பேரவையில் எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தின் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொளி மூலம் நடத்தினார்.

22.17.08.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

23.16.08.2022

எரிசக்தித் துறை சார்பில் ரூ.161.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 51 துணை மின் நிலையங்களில் ரூ.97.56 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் திறன் உயர்த்துதல் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

24.16.08.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான "மின்னகத்தில்" திடீர் ஆய்வு மேற்கொண்டார்

25.05.08.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்,

26.03.08.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் ஆய்வு

27.02.08.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிவிரிவான ஆய்வினை காணொளி காட்சி மூலமாக நடத்தினார்.

28.27.07.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் எரிசக்தித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

29.25.07.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள வளையசுற்றுத்தர அமைப்புகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்

30.22.07.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.Vசெந்தில்பாலாஜி அவர்கள் பி&சிமில் துணைமின்நிலையத்தை ஆய்வுமேற்கொண்டார்.

31.18.07.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மேற்கொண்ட சிறப்பு பராமரிப்புபணிகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

32.15.06.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மின்பகிர்மான வட்டங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புபணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

33.14.06.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகு உய்ய அனல் மின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் .

34.12.06.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில்பாலாஜி அவர்கள் வட சென்னை அனல் மின் திட்டம் நிலை – 3 பணிகளை ஆய்வு செய்தார்.

35.09.05.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது .

36.22.04.2022

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தகவல்.

37.18.04.2022

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு,விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் 6 வளைய சுற்றுத்தர அமைப்புக்களை (Ring Main Unit) பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள்.

38.16.04.2022

ஓராண்டில் ஒரு இலட்சம் மின்இணைப்பு பெற்று பயனடைந்த விவசாய பெருமக்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடி விழாப் பேரூரையாற்றினார்கள் .

39.13.04.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற 16.04.2022 அன்று ஓராண்டில் 1,00,000 விவசாயமின்இணைப்பு பெற்ற விவசாய பெருமக்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடவுள்ளார் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தகவல் .

40.06.04.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் எதிர்வரும் கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. .

41.28.03.2022

மாண்புமிகு மின்சாரம், மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.விசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. .

42.16.03.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கொள்முதல் தொடர்பாக என்.எல்.சி தலபிராதிருத்தப்பட்டஒப்பந்தம், சோலார் எனர்ஜி கார்பரேஷன் உடன் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டது. .

43.07.03.2022

கண் பரிசோதனை முகாமினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தொடங்கிவைத்தார் .

44.25.01.2022

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. .

45.10.01.2022

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு,Vசெந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், 15 புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகளை(RMU) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள்.

46.03.01.2022

மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .

Save-energy1 மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும்        Save-energy2 உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும்        Save-energy3 மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம்        Save-energy5 மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்  Save-energy1 மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்  Save-energy1 மாசற்ற சுற்றுச்சூழலுக்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவோம்Save-energy1 நம் தாய் பூமியை காக்க மின் வாகனத்தை ஆதரிப்போம்   Save-energy1 மின்சார வாகனம் இரைச்சலை உண்டாக்குவதில்லை   Save-energy1 பூமியை பசுமையாக்குவோம் மின்வாகனத்தை கொண்டு   Save-energy1 எதிர்காலத்தை வடிவமைப்போம் மின்சார வாகனம் கொண்டுSave-energy1 மின்வாகனம் பயன்படுத்தி எதிர்கால தலைமுறை காப்போம்Save-energy1 எரிபொருளைச் சேமிக்கவும், பணத்தைச் சேமிக்கவும், மின்சார வாகனத்திற்கு மாறவும்Save-energy1 மின் வாகனம் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்Save-energy1 மின்சார வாகனம்: ஒரு பிரகாசமான எதிர்காலம்Save-energy1 மின்சார வாகனம்: புகை, சத்தம் மற்றும் மாசு இல்லை