நிரந்தர முன்வைப்பு தொகை செலுத்தும் முறைகள்
முன்வைப்பு தொகை
ஒருவர் மட்டுமே உள்ள ஒப்பந்தப்புள்ளி தவிர மற்ற ஒப்பந்தப்புள்ளிகளுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இது கொள்முதல் செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். முன்வைப்புத் தொகை கேட்பு வரைவோலையாகவோ வங்கியின் பணம் செலுத்தும் உத்தரவாகவோ இருக்க வேண்டும்.
நிரந்தர முன்வைப்புத் தொகை
ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் கீழ்கண்ட முன்வைப்புத் தொகையை நிரந்தர முன்வைப்பு தொகையாக செலுத்தலாம்.
நிரந்தர முன்வைப்பு தொகை | ஒப்பந்தப்புள்ளி மதிப்பு |
ரூ. 10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) | ரூபாய் 10 கோடி வரை |
ரூ. 20,00,000 (ரூபாய் இருபது லட்சம் மட்டும்) | ரூபாய் 50 கோடி வரை |
ரூ. 50,00,000 (ரூபாய் ஐம்பது லட்சம் மட்டும்) | வரையறையில்லை அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகை, இவை இரண்டில் எது அதிகமோ அத்தொகை செலுத்தப்படவேண்டும். |
வாரியத்தில் நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்திய ஒப்பந்ததாரர்கள், விற்பனை, வேலை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு தலைமையகத்தில் முடிவு செய்யப்படும் ஒப்பந்தப்புள்ளியில் தனியே முன்வைப்பு தொகை கட்டாமல் மேற்கூறிய எல்லைக்கு உட்பட்டு பங்கு பெறலாம். ஒப்பந்தப்புள்ளியில் பங்கு பெறுபவர்கள் தங்கள் கோரிக்கையின்படி தனித்தனியே நிரந்தர முன்வைப்பு தொகையை மேலே குறிப்பிட்டவாறு தக்க தலைமை பொறியாளர்/பகிர்மான மண்டலம், அனல், புனல் மற்றும் இதர மின் திட்டங்கள்/நிலையங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் செலுத்தி தக்க தலைமை பொறியாளர்களின் அனைத்து ஒப்பந்தங்களிலும் தனித்தனியே ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் முன்வைப்பு தொகை செலுத்தாமல், மேற்குறிப்பிட்ட வரையறைக்குள் பங்கு பெறலாம். மேலும், மண்டலம்/திட்டம்/புனல்/அனல் இதர மின் உற்பத்தி நிலையங்களின் ஒப்பந்தப்புள்ளியில் நிரந்தர முன்வைப்பு தொகை செலுத்திய விவரங்களை குறிப்பிட்டு ஒப்பந்ததத்தில் முறையே பங்கு பெறலாம்.
தலைமை பொறியாளரின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள, தனியாக முன்வைப்பு தொகை அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும்